கியாரா ..வுக்காக படப்பிடிப்பை மும்பைக்கு மாற்றிய யாஷ்
டாக்ஸிக் (Toxic) படத்தில் யாஷ் மற்றும் கியாரா அத்வானி இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு இடம் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகை கியாரா அத்வானியின் வசதிக்காக படப்பிடிப்பு மற்றபட்டுள்ளது.
யாஷ் தனது டாக்ஸிக் இயக்குனர் கீது மோகன்தாஸ் மற்றும் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா ஆகியோரிடம் முழு படப்பிடிப்பையும் கியாரா ..வுக்காக பெங்களூருவிலிருந்து மும்பைக்கு மாற்றுமாறு கேட்டுக் கொண்ட செய்தி ரசிகர்களை நெகிழ வைத்திருகிறது.
கியாரா அத்வானி Conceive…ஆகி இருப்பதால். அடிக்கடி பயணம் செய்வதால் கியாரா கஷ்ட்ட படுகிறார் என்று ஒட்டுமமோத்த படகுழுவும் மும்பை..இக்கு pack ஆகிவிட்டதாம்.
2022 ஆம் ஆண்டு பிளாக்பஸ்டர் படமான கேஜிஎஃப் 2 க்குப் பிறகு யாஷ் எந்த படத்திலும் நடிக்கவில்லை.
‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் டாக்ஸிக் திரைப்படம் மார்ச் 19, 2026 அன்று உகாதி, மற்றும் ஈத் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது..
பலருக்குத் தெரியாத விஷயம், படத்தின் தலைப்பு, டாக்ஸிக், யாஷ் அவர்களால் பரிந்துரைக்கப்பட்டது என்று . இது குறித்து அவர் சமீபத்தில் தி ஹாலிவுட் ரிப்போர்ட்டரிடம் கூறுகையில்,. நான் டேக்லைனைக் கொண்டு வந்தேன்.
தலைப்பு மற்றும் டேக்லைன் இரண்டும் பொருத்தமாக இருபதாக உணர்ந்தேன். இன்று, நாம் நிறைய குழப்பங்களை கடந்து செல்கிறோம், மேலும் ‘நச்சு’ என்ற வார்த்தை பல சூழல்களில் பயன்படுத்தப்படுகிறது.
நாம் அனைவரும் பல வழிகளில் மிகவும் நச்சு சூழ்நிலையில் வாழ்கிறோம். எனவே Toxic மிகவும் பொருத்தமான தலைப்பாக இருக்கும் என்று நான் நினைத்தேன்.”


