சிவில் துறை சார்பில் பயிலரங்கம் பேராசிரியர்கள் தொழில் துறையினர் பங்கேற்பு
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் சிவில் துறை சார்பில் பயிலரங்கம் பேராசிரியர்கள் தொழில் துறையினர் பங்கேற்பு.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியின் சிவில் துறை சார்பில் கல்லூரிகளில் பணி புரியும் பேராசிரியர்கள் மற்றும் தொழில் துறையினர் துறையினருக்கு சிவில் துறையின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் கான்கிரீட் கலவைகள் நீண்ட நாட்கள் உழைக்கக்கூடிய கட்டுமான அமைப்பு போன்றவை பற்றிய 6 நாள் பயிலரங்கம் இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் நிதி உதவியுடன் கல்லூரியின் மத்திய நூலகத்தில் நேற்று காலை தொடங்கியது.
இந்த நிகழ்ச்சிக்கு ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி தாளாளர்
கோ.ப. செந்தில்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ராஜா கல்லூரி டின் ராமசாமி ,துணை முதல்வர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிவில் துறை தலைவர் சௌமியா தேவி அனைவரையும் வரவேற்றார்.
இதன் தொடக்க விழாவில் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் சிவில் துறையின் டீன் வாசுகி கலந்துகொண்டு பயிலரங்கை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
மேலும் பல்வேறு பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள் நாகன், ராஜசேகர், பன்னீர்செல்வம், ரேவதி, தொழில் நிறுவனங்களை சேர்ந்த இளமுருகன், மணிகண்டன், சீனிவாசன், நாராயணமூர்த்தி,ரவிசங்கர் ஆகியோர் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
இதில் 20 க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள் தொழில் நிறுவனங்களைச் சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

