தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கத்தினர் பொங்கல் போனஸ் 15000 வழங்க வலியுறுத்தி ஆர்பாட்டம்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலில் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பொங்கல் போனஸ் ரூபாய் 15,000 வழங்க வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொங்கல் பண்டிகைக்கு போனஸ் வழங்க கோரி கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் போராடி வருகிறோம், தொழிலாளர் நலன் காக்கும் அரசு என்று சொல்லிக் கொள்ளும் தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு முன்பாக பொங்கல் போனஸ் வகையாக 15 ஆயிரம் வழங்க வேண்டும்.
வாரியத்தில் பணம் இருக்கிறது முதல்வர் ஸ்டாலினுக்கு தான் மனமில்லை பொங்கல் போனஸ் பெறும் வரை போராட்டம் தொடரும் எனவும் உடனே பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


