in

மகளிர் சுய உதவி குழுவினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்

மகளிர் சுய உதவி குழுவினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்

 

தேனி மாவட்டம் கம்பம் அருகே அரசு கல்குவாரியில் பணியில் ஈடுபடும் பெண்களை பணம் கேட்டு மிரட்டும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகளிர் சுய உதவி குழுவினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் அரசுக்கு சொந்தமான கல்குவாரி அமைந்துள்ளது

பல வருடங்களுக்கு முன்பு செயல்பட்டு வந்த நிலையில் ஏலம் உரிமை நிறைவடைந்ததால் கடந்த சில வருடங்களாக கல்குவாரி மூடப்பட்டு கிடந்தது இதனால் கல்குவாரியில் கல்லுடைக்கும் பணியில் ஈடுபடும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மீண்டும் கல்குவாரி திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்

இந்நிலையில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 6 கல்குவாரியில் கல் உடைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி இதனை அடுத்து மீண்டும் கல்குவாரி திறக்கப்பட்டு மகளிர் சுய உதவிக் குழு மூலம் தொழிலாளிகள் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டனர்

இந்த நிலையில் காமயகவுண்டன் பட்டியை சேர்ந்த தனி நபர்கள் கல்குவாரியில் பணியில் ஈடுபடும் பெண்களிடம் பணம் கேட்டு மிரட்டி வருவதாக மகளிர் சுய உதவி குழுவினர் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.

முறையான அனுமதி பெற்று அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு மகளிர் சுய உதவிக் குழுவினர் கல்குவாரி பணிகளை செய்து வரும் நிலையில் காமயகவுண்டன் பட்டியைச் சேர்ந்த ராஜாங்கம், சசி, மொக்கை ஆகிய மூன்று நபர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்து வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும்

மேலும் மாதம் மாதம் பணம் தர வேண்டும் இல்லை என்றால் கல்குவாரிகள் மூடி விடுவோம் என மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களை மிரட்டுவதாகவும்.

இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு பணிகள் பாதிக்கப்படுவதாக கூறி தனி நபர்கள் மூன்று பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காற்று கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழுவினர் புகார் தெரிவித்தனர்.

What do you think?

கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம்

சபரிமலையில் கொடிய விஷமுள்ள “ராஜ நாகம்” பிடிபட்டது!