கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நெடுஞ்சாலை அருகில் 60 ஆண்டுக்கு மேலாக இருந்த அம்மன் கோவிலை போலீசார் பாதுகாப்புடன் இடித்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், அதிகாரிகள், போலீசார் மீது மண்ணை வாரிவிட்டு சாபம் விட்டு கதறி அழுத பெண்கள்.
சிதம்பரம் நான் முனிசிபல் தெற்கு அம்மன் கோவில் கிராம பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் அந்த பகுதியில் 2 தலைமுறைகளாக சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் அம்மன் கோவில் ஒன்று உள்ளது, தற்போது விழுப்புரம் நாகை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையிலும் கோவிலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாத இருந்தது ஆனால் தற்போது கோவில் இருக்கும் இடம் நெடுஞ்சாலைக்கு சொந்தமானது என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் ஜேசிபி வாகனத்துடன் புதிதாக கட்டப்பட்டு வந்த கோவிலை இடித்து தள்ளினர், அப்போது அங்கு கூடியிருந்த கிராம பொதுமக்கள் கோவிலை இடிப்பதை பார்த்து கண்ணீர் விட்டு அழுததுடன் மண்ணை எடுத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது வீசி விட்டு சாபம் விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


