in

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிமை முன்னால் அமைச்சர் செஞ்சி மஸ்தான்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிமை முன்னால் அமைச்சர் செஞ்சி மஸ்தான்

 

வல்லம் ஒன்றியம் அணிலாடி ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிமை முன்னால் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்…….

விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் அணிலாடி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது

வல்லம் ஒன்றிய பெருந்தலைவர் அமுதா ரவிக்குமார் தலைமையில்

ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளரும் முகாம் கண்காணிப்பு அலுவலர் அன்புராஜ் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் பிலோமினாள் லாரான்ஸ் வரவேற்பில்

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ கலந்துகொண்டு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கை மனுக்களைப் பெற்று கணினி மூலம் பதிவு செய்வதற்கு அவர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டு மென அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

முகாமில் அணிலாடி, கல்லாலிப்பட்டு, மேல் கூடலூர், கீழ் வைலாமுர், தளவானூர் ஆகிய ஊராட்சிகளில் இருந்து வந்திருந்தஏராளமான பொதுமக்கள் குடும்ப அட்டை, இலவச வீட்டு மனை பட்டா, பாட்டா மாற்றம், முதியோர் ஓய்வூதியம், மகளிர் உரிமைத்தொகை கேட்டு மனு செய்தனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் மாசிலாமணி அவைத் தலைவர் டாக்டர் சேகர், ஒன்றிய செயலாளர் இளம்வழுதி மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமதாஸ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

What do you think?

சிறுணாம்பூண்டி அருள்மிகு ஸ்ரீ ஜடாமுனிஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா

மடப்புரம் கோவில் காவலாளி வழக்கு சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான மருத்துவர் குழு மற்றும் கோவில் பணியாளர்