ஒரே போன் காலில் தளபதி என்னை திரும்பி பார்க்க வைத்துவிட்டார்… ராஜூ ஜெயமோகன்
பிக் பாஸ் ராஜூ ஜெயமோகன் விஜய் டிவியில் “கனா காணும் காலங்கள்” தொடரின் மூலம் அறிமுகமானார்.
அதன்பிறகு “நாம் இருவர் நமக்கு இருவர்” , சரவணன் மீனாட்ச்சி சீரியல்களில் நடித்தார் பிக் பாஸ் சீசன் 5..இல் போட்டியாளராக கலந்துகொண்டு வெற்றி பெற்றார்.
தற்போது குக் வித் Comali நிகழ்சியிலும் போட்டியாளராக களம் இறங்கியிருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரபலமடைந்த ராஜூ ஜெயமோகன் ….சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இவர்களுடன் சரண்யா பொன்வண்ணன், சார்லி, தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடித்துள்ள இப் படம் விரைவில் வெளியாக உள்ளது.
முதல் படம் சரியாகப் போகாததால் சினிமாவை விட்டு விலக முடிவு செய்த. ராகவ் மிர்தாத் ..இக்கு இப்படத்தில் சான்ஸ் கொடுத்தார் சுரேஷ் சுப்பிரமணியம்.
இப்பட விழாவில் ராஜு பேசும்பொழுது கதாநாயகனாக அறிமுகம் ஆவது எனக்கு மகிழ்ச்சி இதற்கு காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் என்னை ஹீரோ என சொல்கிறார்கள் என்னை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களை காப்பாற்றி விட்டேன் என்றால் தான் நான் உண்மையான ஹீரோ மற்றபடி படங்களில் யாரையாவது காப்பாற்றி விட்டால் அவர் ஹீரோவாகி விட முடியாது படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த விஜய் என்னை அழைத்து பாராட்டியதை என்னால் மறக்கவே முடியவில்லை.
ஒரே போன் காலில் எங்க படத்தை தமிழ்நாடே திரும்பி பார்க்கும் அளவிற்கு செய்துவிட்டார் என்னை வாழ வைத்து விட்டார். நீங்கள் இல்லை என்றால் நான் இல்லை என்று நேரில் அவரிடம் சொன்ன தருணம் என்னால் மறக்க முடியாது என்று கூறினார்.