கேரளாவில் 4 மணிகாட்சிக்கு தடையாதா? ‘ஜனநாயகன்’ ரிலீஸ் சிக்கல்! அதிர்ச்சியில் தளபதி ரசிகர்கள்!
தளபதி விஜய்யோட கடைசிப் படம் ‘ஜனநாயகன்’.
தமிழகத்தை விட கேரளாவுல விஜய்க்கு இருக்குற ‘கிரேஸ்’ வேற லெவல். அதனாலயே அங்க எப்போவுமே அதிகாலை 4 மணிக்கே ‘ஃபேன்ஸ் ஷோ’ (Fans Show) களைகட்டும்.
ஆனா இப்போ அங்க இருக்குற ரசிகர்களுக்கு ஒரு பேரிடி விழுந்திருக்கு!விஜய்யோட கோட்டைனு சொல்லப்படுற கேரளாவுல, இந்தத் தடவை அதிகாலை 4 மணிக்கு படம் திரையிட அனுமதி கிடைக்கலையாம்.
கேரள விநியோகஸ்தரான எஸ்.எஸ்.ஆர். என்டர்டெயின்மென்ட்ஸ் (SSR Entertainments), “6 மணிக்கு ஜனநாயகன் முதல் காட்சியைப் பார்க்கத் தவறாதீர்கள்” அப்படின்னு போஸ்டர் ரிலீஸ் பண்ணிருக்காங்க.
கடைசி நேரத்துல ஏன் 4 மணி காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுச்சுன்னு தெரியாம ரசிகர்கள் குழப்பத்துல இருக்காங்க. “அப்படி என்னதான் பிரச்சனை வந்தது?”னு சோஷியல் மீடியாவுல கேள்வி மேல கேள்வி கேட்டுட்டு இருக்காங்க.
கேரளாவுலயே இந்த நிலைமைனா, மத்த இடங்கள்ல என்ன ஆகுமோனு ஒரு சின்ன பயம் ரசிகர்கள் கிட்ட இருக்கு.தமிழகத்துல வழக்கம்போல அதிகாலைக் காட்சிகளுக்குக் கட்டுப்பாடு இருக்குறதால, இங்க காலை 9 மணிக்குத் தான் முதல் காட்சி திரையிடப்படும்னு சொல்லப்படுது.
ஆனாலும், தளபதியோட கடைசிப் படம்ங்கிறதால 4 மணி காட்சியை எதிர்பார்த்துக் காத்திருந்த கேரளா ரசிகர்களுக்கு இது நிஜமாவே ஒரு பெரிய ஏமாற்றம் தான்!


