in

மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்களா? காங்கிரஸ் கமிட்டி மாநில பொறுப்பாளர் நிவேதித் அல்வா பதில்.

மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்களா? காங்கிரஸ் கமிட்டி மாநில பொறுப்பாளர் நிவேதித் அல்வா பதில்.

தொகுதி வாங்குவதில் எந்த ஒரு கருத்து வேறுபாடுகளும் இல்லை, திமுக –காங்கிரஸ் இணைந்து 28 தொகுதிகளில் எங்கு நிறுத்தப்படுவார்கள் என்பது குறித்து பேசப்படும். இதுகுறித்து முடிவு செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

மதுரை அழகர் கோயில் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொறுப்பாளர் நிவேதித் அல்வா தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து செய்திகளை சிந்தித்து கூறுகையில்;மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்களா?

தொகுதி வாங்குவதில் எந்த ஒரு கருத்து வேறுபாடுகளும் இல்லை, எத்தனை தொகுதி என்பதில் நாங்கள் உறுதி செய்து விட்டோம், திமுக காங்கிரஸ் இணைந்து 28 தொகுதிகளில் எங்கு நிறுத்தப்படுவார்கள் என்பது குறித்து பேசப்படும். இதுகுறித்து முடிவு செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும்.

ராகுல் காந்தி தமிழ்நாடு வருகை குறித்த கேள்விக்கு? ‌

ராகுல் காந்தி பிற மாநிலங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் சமீபத்தில் கேரளாவில் கூட பிரச்சாரம் மேற்கொண்டார். விரைவில் ராகுல் காந்தி பிரியங்கா காந்தி கார்கே தமிழ்நாட்டிற்கு வருகை தருவார்கள்.

28 தொகுதிகளில் தொகுத கொடுத்தாலும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி?

எதிர்க்கட்சி கேள்விக்கு பதில் சொல்ல முடியாது எங்கள் நிர்வாகிகள் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு மட்டுமே பதில் கூற முடியும். எங்கள் நிர்வாகிகளின் ஆசைகள் பற்றி எங்களுக்கு தெரியும்.28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது எங்கெங்கு நிறுத்தப்படுவார்கள் என்பது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும்.

சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பான கேள்விக்கு?

ஒரே நாள் இரவில் இந்த தட்டுப்பாடு என்பது இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சினையாக மாறி உள்ளது. போன வாரம் எல்பிஜி கேஸ் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை என மத்திய அரசு கூறியது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக திடீரென தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

உணவு சங்கங்கள் கூறியுள்ளது எல்பிஜி கேஸ் கட்டுப்பாட்டால் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது‌ என்று சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சகம் இதற்க்கு கண்டிப்பாக பதில் கூற வேண்டும். பாஜக கூட்டணி தொடர்பாகவும் ஏற்கனவே சர்வதேச விமாலயமாக இருக்கும் மாநிலத்தை மீண்டும் சர்வதேச விமானமாக மாற்றுவது தொடர்பாக தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும் எல்பிஜி கேஸ் தட்டுப்பாட்டு குறித்து போராட்டம் செய்யப்பட்டு வருகிறது உணவகங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக வேட்பாளர் நிறுத்தப்பட்டால் காங்கிரஸ் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்களா?

பிஜேபி எங்க நிறுத்திக்கிறார்களோ அதை நோக்கி எங்களது பார்வை இருக்காது. உங்களை பொறுத்த வரைக்கும் நிர்வாகிகள் எங்கு கூறினாலும் அதை திமுகவுடன் கூறி உடன்பாடு செய்வோம்.

What do you think?

அஜித்தின் ‘திக் திக்’ நிமிடங்கள்! துபாய் டூ சென்னை..எப்படி வந்தார்? வைரல் வீடியோ

சென்னை கோயம்பேட்டில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் சார்பில் சிலிண்டர் கட்டுப்பாட்டை கண்டித்து நூதன முறையில் போராட்டம்.