பிரதமருடனான சந்திப்பு ஏன்?
நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, “கீழடியின் தொன்மையை விரைவாக அங்கீகரிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஜூலை மாதம் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்ற பிறகு பிரதமருடனான முதல் சந்திப்பு இதுவாகும்.
வியாழக்கிழமை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபிறகு கமல் X தளத்தில் சந்திபிற்கான காரணத்தை பகிர்ந்து கொண்டார்.
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். ஒரு கலைஞனாகவும் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவும் அவரிடம் சில கோரிக்கைகளைத் தெரிவித்திருக்கிறேன்.
அவற்றுள் தலையாயது கீழடி. தமிழின் தொன்மையை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொல்லும் தமிழர்களின் முன்னெடுப்புகளுக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன் என்று பதிவிட்டுள்ளார்.
குடிமக்களின் குறைகளை… களையும் எந்த தலைவனையும் தோற்கடிக்க முடியாது. கமல் சார் எந்த Category என்று போக போக தெரியும்.


