“ரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரீகமா நடந்துக்குறாங்க?
நட்சத்திர நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யாவைப் பிரிஞ்சதுக்கு அப்புறம் ரொம்ப நாளா சிங்கிளாவே இருந்தாங்க.
இப்போ அவரோட தனிப்பட்ட வாழ்க்கை பத்தி ஒரு பெரிய நியூஸ் பரவிக்கிட்டு இருக்கு.பாலிவுட்ல ‘ஃபேமிலி மேன்’, ‘சிட்டாடல்’னு ஹிட் கொடுத்த பிரபல இயக்குனர் ராஜ் நிடிமோருவை சமந்தா காதலிச்சு வந்ததா சொல்லப்பட்டது.
இப்போ அவங்க ரெண்டு பேரும் கோயம்புத்தூர்ல இருக்குற ஈசா (Isha) மையத்துல வச்சு ரகசியமா கல்யாணம் பண்ணிக்கிட்டதா ஒரு தகவல் காட்டுத்தீயா பரவி வருது.
சமந்தாவைப் பார்த்ததும் ரசிகர்கள் சும்மா இருப்பாங்களா? செல்ஃபி எடுக்கணும், போட்டோ எடுக்கணும்னு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அவரைச் சுத்தி வளைச்சுட்டாங்க.
கூட்ட நெரிசல்ல சமந்தா ரொம்பவே திணறிப் போயிட்டாங்க. செக்யூரிட்டியால கூட கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியல. ஒரு வழியா கஷ்டப்பட்டு கூட்டத்துல இருந்து தப்பிச்சு, வேகமா ஓடிப் போய் தன்னோட கார்ல ஏறி அங்கிருந்து கிளம்பிட்டாங்க.
அவங்க முகத்துல ஒரு விதமான பயமும் பதற்றமும் நல்லாவே தெரிஞ்சது. சமீபத்துல நடிகை நிதி அகர்வாலுக்கு இதே மாதிரி ஒரு மோசமான அனுபவம் கிடைச்சது.
இப்போ சமந்தாவுக்கும் இப்படி நடந்திருக்கிறது பார்த்துட்டு, “ரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரீகமா நடந்துக்குறாங்க? செலிபிரிட்டிஸ்க்கும் ஒரு பிரைவசி இருக்குல்ல”னு நெட்டிசன்கள் திட்டி வர்றாங்க.


