in

“உங்களுக்குப் பிடிச்ச தலைவர் யாரு?” – நடிகை டாப்ஸி

“உங்களுக்குப் பிடிச்ச தலைவர் யாரு?” – நடிகை டாப்ஸி

 

பாலிவுட்ல எப்பவுமே ரொம்ப போல்டா பேசுற நடிகை டாப்ஸி, இப்போ ஒரு டிவி இன்டர்வியூல கொடுத்த பதில் சமூக வலைதளங்கள்ல தீயா பரவிக்கிட்டு இருக்கு.

அவரோட ‘அஸி’ (Azi) படம் நாளைக்கு (பிப் 20) ரிலீஸ் ஆகப்போற நிலையில, இந்த மேட்டர் இப்போ பெரிய விவாதத்தையே கிளப்பிருக்கு.

ஒரு டிவி நிகழ்ச்சியில டாப்ஸிகிட்ட ஒரு கஷ்டமான கேள்வி கேட்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி ரெண்டு பேரோட போட்டோவையும் காட்டி, “உங்களுக்குப் பிடிச்ச தலைவர் யாரு?”ன்னு கேட்டாங்க.

கேள்வி கேட்டதும் டாப்ஸி முதல்ல “என்னை விட்டுடுங்கப்பா”ங்கிற மாதிரி கையெடுத்துக் கும்பிட்டாரு. அப்புறம் டக்குனு மோடியோட போட்டோவைத் தொட்டுட்டு, “நான் இன்னும் இந்த நாட்டுல தான் இருக்கணும் (வாழணும்)” அப்படின்னு ஒரு போடு போட்டாரு.

டாப்ஸியோட இந்தப் பதிலைப் பார்த்த நெட்டிசன்கள் ரெண்டு பக்கமும் பிரிஞ்சு நின்னு கமெண்ட் அடிக்கிறாங்க:

“டாப்ஸி நிஜமாவே சிங்கப் பெண் தான்! பயப்படாம மனசுல பட்டதைச் சொல்லிட்டாரு”னு ஒரு குரூப் பாராட்டுறாங்க.

“அவர் பயத்துல தான் மோடியைத் தேர்ந்தெடுத்திருக்காருன்னு அவரோட பாடி லாங்குவேஜ்லயே தெரியுது.

இது படத்துக்கான ஃப்ரீ பப்ளிசிட்டியா கூட இருக்கலாம்”னு இன்னொரு பக்கம் பேச்சு ஓடுது.

What do you think?

நாமக்கல் மோகனூர் பெருமாள் ஆலயத்தில் கல்வி கடவுள் ஶீ லட்சுமி ஹயக்ரீவருக்கு லட்சார்ச்சனை பெருவிழா துவக்கம்

மாசி களரி திருவிழா