கூலி ஆடியோ லாஞ்ச எப்போது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் Pictures தயாரிப்பில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன், அமீர்கான், என்று ஏகப்பட்ட முன்னணி திரை நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் அண்மையில் வெளியாகி செம Viral ஆனது.
இப்படத்தின் செகண்ட் சிங்கிள் ஜூலை இரண்டாம் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை மாதம் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஆரம்பிக்க திட்டமிட்டு இருக்கும் சன் பிக்சர்ஸ் இப்படத்தின் ஆடியோ லான்ச் விழாவை ஜூலை 26 அல்லது 27 ஆம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, அமீர்கான், உபேந்திரா முன்னணி நடிகர்கள் அனைவரும் கலந்து கொள்வதால் ரசிகர்களும் பன்மொழி மெகா ஸ்டார் களை சந்திக்கும் ஆவலை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.


