in

என்ன! சபரிமலை அய்யப்பன் கோவில் தங்கத்தை அபகரித்தாரா நடிகர் ஜெயராம்?


Watch – YouTube Click

என்ன! சபரிமலை அய்யப்பன் கோவில் தங்கத்தை அபகரித்தாரா நடிகர் ஜெயராம்?

 

சபரிமலை அய்யப்பன் கோவில்ல தங்கத்தை அபகரிக்கப்பட்ட சம்பந்தமா, நடிகர் ஜெயராமை விசாரிக்கிறவங்க கைது பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்காங்களாம்.

அங்க கோவில்ல துவார பாலகர் சிலைகள், கதவு நிலைன்னு அங்கங்க பதிச்சிருந்த தங்கத் தகடுகள்ல இருந்து தங்கத்தை திருடிட்டது பெரிய ரகளையாச்சு.

கேரள ஹைகோர்ட் சொன்னதுனால, குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி. வெங்கடேஷ் தலைமையில ஒரு ஸ்பெஷல் டீம் கேஸ் போட்டு விசாரிச்சுட்டிருக்காங்க.

இதுல ஏற்கனவே 2019-ல தங்கத் தகடுகளை சென்னைக்குக் கொண்டு போன உண்ணிகிருஷ்ணன், அது தாமிரத் தகடுகள்னு சர்டிஃபிகேட் கொடுத்த தேவஸ்வம் போர்டோட முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு உட்பட 5 பேரை ஏற்கனவே புடிச்சு ஜெயில்ல போட்டிருக்காங்க.

இப்ப, இந்தத் தங்கத் திருட்டு கேஸ்ல முன்னாள் தேவஸ்தான மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரனையும் விசாரணை வளையத்துக்குள்ள கொண்டு வரலாம்னு முடிவு பண்ணியிருக்காங்க.

ஆனா, கேரளால அடுத்த மாசம் (டிசம்பர்) 9, 11-ம் தேதிகள்ல லோக்கல் எலெக்‌ஷன் நடக்குது. அதனால, எலெக்‌ஷன் முடிஞ்சதும் அவர்ட்ட விசாரிக்க வாய்ப்பு இருக்குதாம்.

அதுக்கு முன்னாடி, துவார பாலகர் சிலைகள், கோவில் கதவு நிலைன்னு எல்லாத்தையும் தன்னோட வீட்டுல வெச்சு பூஜை பண்ண ஏற்பாடு பண்ண நடிகர் ஜெயராமை கைது பண்ணி விசாரிக்கலாம்னு விசாரணை அதிகாரிகள் முடிவெடுத்திருக்காங்க.

இந்தக் கேஸ்ல, ஏற்கனவே முன்னாள் தேவஸ்தான தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பத்மகுமார் போன 20-ம் தேதி கைது பண்ணி ஜெயில்ல இருக்காரு.

இப்ப, ஜெயில்ல இருக்க பத்மகுமாரை 2 நாள் போலீஸ் கஸ்டடியில எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி கொடுத்திருக்கு.

இந்தத் தங்கத் திருட்டு விஷயத்துல சபரிமலை அய்யப்பன் கோவிலோட பெரிய தந்திரிகளான கண்டரரு ராஜீவரு, கண்டரரு மோகனருன்னு அவங்க ரெண்டு பேரும் ஸ்பெஷல் விசாரணை டீம் முன்னாடி ஆஜராகி வாக்குமூலம் கொடுத்திருக்காங்க.

What do you think?

தனுஷ் படத்துக்கு செம ஓபனிங்: ‘தேரே இஷ்க் மெயின்’ முன்பதிவில் $3.5 கோடி வசூல்!

வைரலா பரவிட்டு இருக்கு நடிகை சம்யுக்தா கல்யாண போட்டோக்கள்