படப்பிடிப்பில் தண்ணீர் தொட்டி வெடித்தது; படக்குழுவினர் காயம்
நிகில் சித்தார்த்தா மற்றும் அனுபம் கெர் ….ரின் வரவிருக்கும் படமான ‘தி இந்தியா ஹவுஸ்’ படப்பிடிப்பின் போது ஒரு பெரிய தண்ணீர் தொட்டி வெடித்ததால் பயங்கரமான விபத்து ஏற்பட்டது.
ஷம்ஷாபாத் அருகே ஷூட்டிங்..காக படக்குழுவினர் கடல் பின்னணியில் காட்சியை படமாக்க வாட்டர் Tank அமைத்து செட் போடப்பட்டது.
வாட்டர் Tank உடைந்ததால் எதிர்பாராத வெள்ளம் செட்…டை சூழ்ந்தது. காயமடைந்தவர்களில் உதவி கேமராமேனும் ஒருவர், படப்பிடிப்பு தளத்தில் தண்ணீர் புகுந்ததால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
திடீர் வெள்ளத்தில் பல படகுழு உறுப்பினர்களும் சிறு காயங்களுக்கு ஆளானார்கள். சம்பவ இடத்திலிருந்து ஒரு வைரலான வீடியோவில், படகுழு உறுப்பினர்கள் வெள்ளம் சூழ்ந்த பகுதி வழியாக வேகமாக நடந்து சென்று, நீரில் இருந்து உபகரணங்கள் மற்றும் செட் பொருட்களை மீட்க முயற்சிப்பதைக் காணலாம்.
ராம் சரணின் புதிய தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமான ‘தி இந்தியா ஹவுஸ்’ ..சை அறிமுக, இயக்குனர் ராம் வம்சி கிருஷ்ணா இயக்குகிறார். மேலும் 2023 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்ட வீரர் வீர் சாவர்க்கரின் 140 வது பிறந்தநாளின் போது இப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


