in

பழனி பாலாறு பொருந்தலாறு அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது

பழனி பாலாறு பொருந்தலாறு அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது

 

பழனி பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து பாசன நிலங்களுக்கு விவசாய பயன்பாட்டிற்காக 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

பழனி பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து தாடாகுளம் கால்வாய் மூலம் பாசன வசதி பெரும் விவசாயிகள் விவசாய பயன்பாட்டிற்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை ஏற்று இன்று முதல் பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து தாடா குளம் கால்வாய் மூலம் பாசன வசதி பெறும் நிலங்களுக்கு இரண்டாம் போக பாசன வசதிக்காக 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இதன் மூலம் மானூர் கோரிக்கடவு நரிக்கல்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 500 ஏக்கர் மேல் பாசன நிலங்கள் இரண்டாம் போக பாசன வசதி பயனடைவதோடு அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தியடையும்.

மேலும் 155 மில்லியன் கன அடிக்கு மிகாமல் அணையில் இருந்து நீர் இருப்பு மற்றும் வரத்தினை பொறுத்து தண்ணீர் திறக்கப்படும் என நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தங்கள் கோரிக்கையை ஏற்று பாலாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு அப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் சங்கரநாராயணன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

What do you think?

சினிமா செய்திகள்

புவனகிரியில் ஆற்றுப்பகுதியில் ஆக்கிரமிப்பு குறித்து நீர்வளத்துறையினர் எல்லை அளவீடு