ஊழலால் தான் பிடிஆர் ஒதுங்கி இருந்தாரா- NOT FOR JOKE என கோபப்பட்ட செல்லூர் ராஜூ
மதுரை மாநகராட்சி ஊழலை பார்த்தால் பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்த ஜெயலலிதாவே நொந்திருப்பார் என செல்லூர் ராஜூ விமர்சனம்.
ஊழலால் தான் பிடிஆர் ஒதுங்கி இருந்தாரா- NOT FOR JOKE என கோபப்பட்ட செல்லூர் ராஜூ.
மதுரை மாநகராட்சியில் 150 கோடி ஊழல் வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசுகையில்,
மாநகராட்சி கஜானா பணத்தை மக்களுக்கு செலவழிக்காமல் தங்கள் பாக்கெட்டில் மண்டல தலைவர்கள், திமுக கவுன்சிலர்கள் போட்டுக்கொண்டுள்ளனர்.
மதுரை மாநகராட்சியில் வரலாறு காணாத ஊழல் நடந்துள்ளது. 150 கோடிக்கு மேல் மாநகராட்சி வருவாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி ஊழலுக்கு எதிராக அதிமுக 8ம் தேதி போராட்டத்தை அறிவித்ததையடுத்து 7ம் தேதி மண்டல தலைவர்களை முதல்வர் ராஜினாமா செய்ய வைத்தார்.
மாநகராட்சியில் மக்களின் பணம் சூறையாடப்பட்டுள்ளது. அதற்கு சான்று தான் முதல்வரின் மண்டல தலைவர்கள் ராஜினாமா உத்தரவு.
சாதாரண பில்கலெக்டர்கள் மீது நடவடிக்கை எடுத்து கண்துடைப்பாக ஏதோ நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
மண்டல தலைவர்கள் மற்றும் மாநகராட்சி உயரதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
டாஸ்மாக் ஊழல் போல அமலாக்கத்துறை ரெய்டு நடந்தது. அமைச்சர் அதிகாரிகள் விசாரிக்கப்பட்டனர். தொடர்ந்து நீதிமன்றத்திற்கு சென்றனர். அதுபோல மதுரை மாநகராட்சி ஊழலையும் கால தாமதப்படுத்துவார்களோ என்ற அச்சம் உள்ளது.
மதுரை மாநகராட்சி கணினி பொறியாளர் ரவி என்பவரின் மனைவி பொன்மேனி என்பவரை மதுரை மேயருக்கு உதவியாளராக சட்டவிரோதமாக நியமித்துள்ளார்.
ஆண்டவனே தவறு செய்தாலும் தவறு தவறு தான். எல்லாவற்றுக்குமே காரணம் மதுரையின் முதல் மகள் மேயர் தான். வழக்கில் மேயர் பெயரையும் குறிப்பிட்டுள்ளோம்.
மதுரை மேயர் கிளீயரா என அமைச்சர் கே.என்.நேருவிடம் தான் கேட்க வேண்டும்.
பிடிஆர் ஒதுங்கி இருந்தாரா என்ற கேள்விக்கு,
NOT FOR JOKE என கேள்வியை தவிர்த்த செல்லூர் ராஜூ.
இந்த முறைகேட்டில் மேயரையும் விசாரிக்க வேண்டும். மேயருக்கு தெரியாமல் எப்படி இது நடந்திருக்கும். மேயர் தானே மாநகராட்சிக்கு எல்லாமே.
பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு கொண்டு வந்தார் ஜெயலலிதா. ஆனால் இந்த முறைகேட்டை பார்த்து ஜெயலலிதா இருந்திருந்தால் நொந்திருப்பார்.
8 மாதங்களாக அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வரி முறைகேடு தொடர்பாக குரல் கொடுத்தனர்
ராஜினாமா செய்த 5 மண்டல தலைவர்களின் சொத்து குவிப்பு குறித்து விசாரிக்கப்பட வேண்டும்
முறைகேட்டில் ஈடுபட்ட மண்டல தலைவர்கள் பினாமி பெயரில் சொத்துக்களை சேர்த்து இருக்கலாம் என தெரிவித்தார்.
அன்புமணி ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றார்.