in

வெற்றி வேலாயுத சுவாமி ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி வெற்றி விநாயகர் திருத்தேர்

வெற்றி வேலாயுத சுவாமி ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி வெற்றி விநாயகர் திருத்தேர்

 

புவனகிரி அருகே பெருமாத்தூர் வெற்றி வேலாயுத சுவாமி ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெற்றி விநாயகர் திருத்தேர் வலம் விமர்சியாக நடைபெற்றது.

திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பெருமாத்தூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வெற்றி வேலாயுத சுவாமி ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆலயத்தில் திருத்தேர் உற்சவம் விமர்சியாக நடைபெற்றது.

ஆலயத்தில் உள்ள ஸ்ரீ வெற்றி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்து திருத்தேரில் அமர்ந்தார்.

பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்கள் வெற்றி விநாயகருக்கு அரோகரா என்ற பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்து ஆலய உட்பிரகாரத்தில் வலம் வந்தனர். முன்னதாக ஆலயத்தில் உள்ள மூலவர் முருகருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்து பிரசாதம் பெற்றுச் சென்றனர் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

What do you think?

21 அடி உயரத்தில் சக்திவிநாயகர் சிலை பிரதிஷ்டை

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் இன்று மாலை கொடியேற்றம்