in

 கிராம உதவியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

 கிராம உதவியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர் சங்கத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் முஸ்தபா தலைமையில், துணை தலைவர் விநாயகமூர்த்தி, வட்டத் தலைவர் மார்க் முன்னிலையில் கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க கோரி, 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ச் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.

  கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக வட்டாட்சியர் அலுவலகம் உள்ளே கிராம உதவியாளர்கள் கருப்பு பேட்ச் அணிந்து காத்திருப்பு போராட்டம் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்களின் 30 ஆண்டு கால கோரிக்கையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணி பாதுகாப்பு,கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலையை தற்போது 5 சதவீதமாக 25% ஆக மீண்டும் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்

மேலும் கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கருப்பு பேட்ச் அணிந்து கோஷங்கள் எழுப்பி வந்த நிலையில், 75 க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் திண்டிவனம் சாலை செஞ்சி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட கிராம உதவியாளர்களை செஞ்சி காவல்துறையினர் கைது செய்து பேருந்தில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

தொடர்ந்து கிராம உதவியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்களுக்கு தேவையான அரசு பணிகள் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலை உள்ளதால் பரபரப்பு நிலை வருகிறது.

What do you think?

Revisão da Roleta Criptomoedas: Tudo o que você precisa saber

லட்சுமி நாராயணபெருமாள், சோமேஸ்வரர் கோவிலில் மாசி மக தேர் திருவிழா கொடியேற்றம்