இரண்டாம் மாநில மாநாட்டிற்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்த விஜயின் பெற்றோர்
தமிழக வெற்றிக்கழக இரண்டாம் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையம் வந்தடைந்த விஜயின் பெற்றோர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் மாநில மாநாடு நாளை மதுரை பாரபத்தி பகுதியில் நடைபெற உள்ளது அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் சூழலில் விஜய் ஏற்கனவே மதுரை வந்து விட்டதாக சில தகவல்கள் பரவி வருகிறது.
இந்த நிலையில் நாளை நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்பதற்காக விஜயின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.
இங்கிருந்து காரில் புறப்பட்டு தனியார் விடுதியில் ஓய்வெடுத்து விட்டு நாளை நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.


