நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கும் விஜய் யேசுதாஸ்
பின்னணிப் பாடகரான விஜய் யேசுதாஸ் நீண்ட காலமாக பாடகராக பணியாற்றி வருபவர்.
2015 ஆம் ஆண்டு “மாரி” என்ற தமிழ் படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கத் தொடங்கினார், பின்னர் 2018 ஆம் ஆண்டு “படை வீரன்” என்ற தமிழ் முக்கிய வேடத்தில் நடித்தார்.
பிறகு “கோலம்பி” படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்தார்’ மற்றும் “அன்புடன் கௌதமி” என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்தார் .
புகழ்பெற்ற பாடகர் கே.ஜே. யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ், 23 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் துறையில் பயணித்து வருபவர் படை வீரன்” போன்ற படங்களில் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்து தமிழ்த் திரையுலகில், ஒரு நடிகராகவும் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார்.
விஜய் யேசுதாஸு அண்மையில் 3D தமிழ் த்ரில்லர் படமான “சால்மன்” என்ற படத்தில் நடித்தார், படம் தோல்வியுற்ற நிலையில், ராம் இயக்கத்தில் பறந்து போ என்ற படத்தில் மிர்ச்சி சிவாவின் நண்பராக தற்போது நடிக்கிறார், நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கும் விஜய் யேசுதாஸுக்கு நடிக்கும் இந்த படம் கை கொடுக்குமா பார்போம்.


