in

TRP..பெற விஜய் டிவியின் மாஸ்டர் பிளான்!‘லவ் பஞ்சாயத்து’ ஷோ! 


Watch – YouTube Click

 

இப்போதெல்லாம் டிவில யாரு ஃபர்ஸ்ட் வர்றதுன்னு ஒரே போட்டியா இருக்கு. அதனாலேயே விஜய் டிவி புதுசு புதுசா யோசிச்சு ஏதாச்சும் பண்ணிக்கிட்டே இருக்காங்க.

இப்போ “டி.ஆர்.பி” (TRP) ரேட்டிங் கொஞ்சம் டல்லா இருக்கறதால, ஒரு செம இன்ட்ரஸ்டிங்கான “லவ் பஞ்சாயத்து” ஷோவை கையில் எடுத்திருக்காங்க.

இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப்போறது வேற யாருமில்ல, நம்ம கலகலப்பான தொகுப்பாளர் பிரியங்கா தான்! அவங்களோட அந்த நக்கல், நையாண்டி அப்புறம் அந்த எனர்ஜியான பேச்சுக்கு ஏற்கனவே பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கு.

இந்த முறை அவங்க ஒரு வித்தியாசமான கான்செப்ட்ல களமிறங்குறாங்க. சமீபத்துல ரிலீஸ் ஆன ப்ரோமோ வீடியோ இப்போ சோஷியல் மீடியால செம வைரல். இது வழக்கமான டான்ஸ் ஷோவோ இல்ல கேம் ஷோவோ கிடையாது. காதல்ல வர்ற சின்னச் சின்ன சண்டைகளைத் தீர்த்து வைக்கிற நிகழ்ச்சி.

“அவர் என்னைக் கண்டுக்கவே மாட்டேங்குறார்”, “எப்பவும் ஃப்ரண்ட்ஸோடயே சுத்துறார்”, “சின்ன விஷயத்துக்கு கூட கோபப்படுறார்” – இப்படிப் பெண்கள் சொல்ற எல்லா குறைகளையும் “குபிட்” (Cupid)- கிட்ட பதிவு செய்றாங்க.

உடனே நம்ம பிரியங்காவும், அந்த மன்மதனும் (Cupid) சேர்ந்து ரெண்டு பக்கமும் பேசி ஒரு முடிவுக்கு வர்றது தான் இந்த நிகழ்ச்சியோட ஹைலைட்.

“உறவுச் சிக்கல்களை டிவி மேடையில விவாதிக்கணுமா?” -ன்னு ஒரு பக்கம் கேள்வி எழுந்தாலும், “இப்போ இருக்குற பசங்க மனசுல இருக்குறதை ஓப்பனா பேசுறதுக்கு இது ஒரு நல்ல இடமா இருக்கும்” -ன்னு பாசிட்டிவ்வான கமெண்ட்ஸ்களும் வருது.பிரியங்காவோட அந்த ஹியூமர் சென்ஸ் இந்த ஷோவுக்குப் பெரிய பலமா இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது.

எவ்வளவு பெரிய பஞ்சாயத்தா இருந்தாலும் அதை ஜாலியா பேசி முடிக்க பிரியங்காவால முடியும்னு சேனல் தரப்பு நம்புறாங்க.

கூடிய சீக்கிரம் இந்த ஷோ எப்போ, எந்த டைம்ல ஒளிபரப்பாகும்னு விஜய் டிவி சொல்லப்போறாங்க.

எது எப்படியோ, காதல், நகைச்சுவை, பஞ்சாயத்துன்னு எல்லாம் கலந்த இந்த ஷோ டி.ஆர்.பி-யில பட்டையைக் கிளப்புமான்னு வெயிட் பண்ணிப் பார்ப்போம்!


Watch – YouTube Click Shorts

What do you think?

திமுக என்னும் தீய சக்தியை விரட்டி அடிப்பேன் புதிய கட்சியின் கொடியை அறிமுகம் செய்த பின் விகே சசிகலா பேட்டி

“சினிமாங்குறது ஒரு கற்பனை உலகம் தானே?- அபர்ணதி Open talk