விஜய் டிவி பிரியங்காவுக்கு திடீரென்று திருமணம்
விஜய் டிவியில் பல ஆண்டுகளாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் பிரியங்கா தேஷ் பாண்டே நிகழ்ச்சிகளை விறுவிறுப்பாகவும் நகைச்சுவையாகவும் கொண்டு செல்வதால் பிரியங்காவிற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம்.
பிரியங்கா ஏற்கனவே ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரை விவாகரத்து செய்து விட்டார்.
தனது பெற்றோருடன் தனியாக வசித்து வரும் பிரியங்காவுக்கு திடீரென்று திருமணம் நடைபெற்று இருக்கிறது.
இவர் வசீ என்பவரை திருமணம் செய்திருக்கிறார். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ திருமணம் நடைபெற்றிருக்கிறது.
தனது திருமண புகைப்படங்களை பிரியங்கா சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார்.
இவருக்கு ரசிகர்களும் திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.