தடுமாறி விழுந்த விஜய் !! விமான நிலையத்தில் தள்ளுமுள்ளு! பதறிப்போன ரசிகர்கள் – வைரல் வீடியோ!
மலேசியாவில் நடந்த ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவை செம மாஸா முடிச்சிட்டு, நம்ம தளபதி விஜய் நேத்து சென்னை திரும்பினாரு.
ஆனா ஏர்போர்ட்ல நடந்த ஒரு விஷயம் இப்போ சோஷியல் மீடியா முழுக்க பெரிய விவாதத்தையே கிளப்பிருக்கு மலேசியாவுல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னாடி ‘தளபதி கச்சேரி’யை முடிச்சிட்டு சென்னை ஏர்போர்ட் வந்தப்போ, அங்கயும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அவரைப் பார்க்க குவிஞ்சுட்டாங்க.
தளபதி காரை நோக்கி வரும்போது ரசிகர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டதால பயங்கர நெரிசல் ஏற்பட்டது. பாதுகாவலர்கள் எவ்வளவோ தடுத்தும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியல.
ஒரு கட்டத்துல காருக்குள்ள ஏறப் போனப்போ, கூட்ட நெரிசல்ல தளபதி விஜய் எதிர்பாராத விதமா தடுமாறி கீழே விழுந்துட்டாரு. இதை நேர்ல பார்த்த ரசிகர்களும், வீடியோவா பார்த்த பொதுமக்களும் பதறிப்போயிட்டாங்க.
உடனே செக்யூரிட்டி ஆளுங்க அவரைத் தூக்கிப் பத்திரமா காருக்குள்ள ஏத்திவிட்டு அனுப்பி வச்சாங்க.
நல்லவேளையா அவருக்கு எந்தக் காயமும் ஏற்படல, பாதுகாப்பா வீடு போய் சேர்ந்துட்டாரு. இந்த வீடியோ வைரலானதை அடுத்து, “தளபதிக்கு இன்னும் கூடுதலான பாதுகாப்பு கொடுக்கணும்”னு ரசிகர்கள் சோஷியல் மீடியாவுல கோரிக்கை வச்சுட்டு இருக்காங்க. ஒருவேளை கூட்டம் இன்னும் அதிகமா இருந்திருந்தா அவருக்கு பெரிய காயம் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்குன்னு சொல்லி அவரோட பாதுகாப்பு குறித்து கவலைப்படுறாங்க.
கடைசிப் படம், அரசியல் என்ட்ரின்னு இருக்குற இந்த நேரத்துல தளபதிக்கு இருக்குற இந்த கிரேஸ் ஒரு பக்கம் ஆச்சரியமா இருந்தாலும், அவரோட பாதுகாப்பு இப்போ ரொம்ப முக்கியம்னு எல்லாரும் சொல்றாங்க!


