அணில் போல தாவும் விஜய்..இக்கு கைதட்டுங்க…. கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்
த. வெக. தலைவரும் நடிகரும் ஆன விஜய்யின் அரசியல் குறித்தும் அவர்களின் தொண்டர்களின் செயல்கள் குறித்தும் பலர் விமர்சனம் செய்து வரும் நிலையில் ப்ளூ சட்டை மாறன் வழக்கத்துக்கு மீறி விஜய் ரசிகர்களையும் தொண்டர்களையும் வெளுத்துவாங்கிடார்.
விஜய் மதுரைக்கு வந்த போது ரசிகர்கள் ரோடு ஷோ நடத்தி பொதுமக்களை இம்சை செய்தனர்.
விஜய்..இக்கு பால் ஊற்ற நினைத்து அருகில் இருந்த காவலர்கள் மேல் ஊற்ற அவர்களும் விஜய் ரசிகர்களை அங்கேயே செஞ்சுட்டாங்க. மேலும் பூசணிக்காய் உடைகிறேன் என்று நடுரோட்டில் போட்டு உடைத்து ரசிகர்கள் செய்த அலம்பரையைப் பார்த்த ப்ளூ சட்டை மாறன் விஜய் ரசிகர்களை வெலுத்து வாங்கினார்.
ஏற்கனவே வாண்டடா போயி எல்லோரையும் வம்பு இழுக்கும் ப்ளூ சட்டை மாறனுக்கு விஜய் ரசிகர்களே Points எடுத்து கொடுத்து விட்டனர். அதனால் ஏகத்திற்கு அவர்களை கழுவி ஊற்றுகிறார்.
விஜய் விமானத்திலிருந்து இறங்கும்போது துள்ளி குதித்து இறங்கினார் அந்த வீடியோவை பகிர்ந்து வண்டியில் இருந்து நேக்கா அணில் போல தாவுவது எப்படி பயிற்சி அளித்த த. வெக. தலைவர் என்று Caption போட ப்ளூ சட்டை மாறனை விஜய் ரசிகர் மோசமாக கமெண்ட் செய்ய அதற்கு ப்ளூ சட்டை மாறன் ….மாற்று அரசியல் என ஊரை ஏமாற்றி பிறகு திமுகவை மட்டுமே நோட்டை (Nottai) சொல்லி அதிமுக பாஜக பற்றி வாய் திறக்காமல் சொம்பு தூக்கி வித்தை காட்டும் விஜய்க்கு ஜோரா கைதட்டுங்கள் என பதிவிட்டுள்ளார்.
இவரின் பதிவுக்கு விஜய் ரசிகர்களும் ப்ளூ சட்டை மாறனை வலைத்தளத்தில் வெளுத்து வாங்குறாங்க.