பிரதமர் மோடியையே பின்னுக்குத் தள்ளிய விஜய் – விஜய்ங்கிறது இப்போ ஒரு பிராண்ட்
விஜய் அரசியலுக்கு வந்ததை அவரோட ரசிகர்கள் “வரலாற்றுத் திருப்பம்”னு கொண்டாடுறாங்க. ஆனா, ஆரம்பமே அவருக்குப் பயங்கரமான சோதனைகளோட தான் தொடங்கியிருக்கு.
அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடி விஜய் நடிச்ச கடைசிப் படம் ‘ஜனநாயகன்’.
இந்தப் படத்துக்கு அவர் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினதா வந்த செய்தி, சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்துல பெரிய பேச்சாக மாறியது.
“அரசியலுக்கு வர்றவர் இவ்வளவு வாங்கலாமா?”ன்னு கேள்வி வந்தாலும், “இது அவரோட உழைப்புக்கும் மார்க்கெட்டுக்கும் கிடைச்ச மதிப்பு”ன்னு ரசிகர்கள் பதிலடி கொடுத்தாங்க.
இந்த வருஷம் நடக்கப்போற சட்டமன்றத் தேர்தல்ல விஜய்யின் கட்சி நேரடியா களமிறங்குது. ஊர் ஊரா கிளைகள் ஆரம்பிக்கிறது, மாவட்ட நிர்வாகிகள் நியமனம்னு வேலைங்க ஜெட் வேகத்துல நடக்குது. “இது வெறும் ஃபேன்ஸ் கிளப் இல்ல, இது மக்களுக்கான இயக்கம்”னு விஜய் தன்னோட முதல் மேடையிலேயே கெத்தா சொல்லிட்டாரு.
விஜய்யோட அரசியல் பயணத்துல ஒரு பெரிய கரும்புள்ளியா அமைஞ்சது கரூர் பிரச்சாரக் கூட்டம். கூட்ட நெரிசல்ல சிக்கி 41 பேர் பலியானது நாட்டையே அதிர வச்சது. இது சம்பந்தமா டெல்லியில இருக்குற சிபிஐ (CBI) ஆபீஸ்ல விஜய் ரெண்டு முறை ஆஜராகி விளக்கம் கொடுத்தாரு.
இது அவரோட அரசியல் எதிர்காலத்துக்கு ஒரு பெரிய சவாலா அமைஞ்சிருக்கு. கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ ஈஸியா ரிலீஸ் ஆகல. அதுல இருக்குற அரசியல் வசனங்கள்னால சென்சார் போர்டு முட்டுக்கட்டை போட்டுச்சு.
கேஸ் கோர்ட்டுக்கு போய் இப்போ தீர்ப்புக்காக வெயிட்டிங்ல இருக்கு. தேர்தல் நேரத்துல இந்தப் படம் ரிலீஸ் ஆகுமா இல்லையான்னு ரசிகர்கள் நகத்தைக் கடிச்சுக்கிட்டு காத்துட்டு இருக்காங்க.
இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் விஜய்க்கு ஒரு செம பெருமை கிடைச்சிருக்கு. ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ வெளியிட்ட “அதிகம் பேசப்பட்ட இந்திய அரசியல்வாதிகள்” (Most Talked About Indian Politicians) பட்டியல்ல, பிரதமர் மோடியையே பின்னுக்குத் தள்ளி விஜய் முதலிடம் பிடிச்சிருக்காரு!
இது நேஷனல் லெவல்ல பெரிய விவாதத்தைக் கிளப்பிருக்கு. “விஜய்ங்கிறது இப்போ ஒரு பிராண்ட்“னு அரசியல் ஆய்வாளர்கள் சொல்றாங்க.


