12 வயது சிறுவன் அபாயகரமாக படகு ஓட்டும் வீடியோ வைரல்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட தொண்டி புதுக்குடி கடற்கரை பகுதியில், 12 வயது சிறுவன் ஒருவன் நாட்டுப் படகை இயக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
அந்த வீடியோவில், நடுக்கடலில் சிறுவன் ஒருவன் விசைப்படகை (நாட்டுப்படகு) வேகமாகச் செலுத்துகிறான். அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி படகிற்குள் விழும் அந்தச் சிறுவன், அதிர்ஷ்டவசமாக மீண்டும் எழுந்து படகைக் கட்டுப்படுத்துகிறான்.

ஒருவேளை அவன் கடலில் விழுந்திருந்தால், உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும்.
பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதில் சிறுவர்களை இது போன்ற ஆபத்தான மீன்பிடித் தொழிலில் ஈடுபடுத்துவது .
அவர்களது கல்வியைப் பெரிதும் பாதிக்கிறது. முறையானப பாதுகாப்பு உபகரணங்களின்றி கடலுக்குள் சிறுவர்களை அனுப்புவது அவர்களது உயிருக்கு உலை வைக்கும் செயலாகும். சட்டத்திற்குப் புறம்பாக சிறுவர்களை மீன்பிடித் தொழிலில் ஈடுபடுத்தும் நபர்கள் மீது மீன்வளத்துறை, கடலோரக் காவல் குழுமம் மற்றும் குழந்தைகள் நல அலுவலர் மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

