in

மின் விளக்குகளால் ஜொலிக்கும் வேளாங்கண்ணி பேராலயம்

மின் விளக்குகளால் ஜொலிக்கும் வேளாங்கண்ணி பேராலயம்

 

மின் விளக்குகளால் ஜொலிக்கும் வேளாங்கண்ணி பேராலயத்தின் ரம்மியமான கழுகுப்பார்வை காட்சிகள்; திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக வழிநெடுகிலும் நிரந்தர மின்கம்பங்கள் அமைத்து பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா அன்னை ஆலயத்தில் ஆண்டு பெருவிழா வருகின்ற 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திருவிழா தொடங்குவதை முன்னிட்டு பேராலயம் கோபுரங்கள் மின்விளக்குகளால் ஜொலிப்பதை பொதுமக்கள் பக்தர்கள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

பேராலய திருவிழாவிற்கு அதிக அளவில் பக்தர்கள் வருகை தர இருப்பதால் வேளாங்கண்ணி பேரூராட்சி சார்பாக கடைவீதி, கடற்கரை சாலை முழுவதும் இரு புறங்களிலும் நிரந்தர மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இரண்டு புறமும் 75 மின்கம்பங்கள் அமைத்து பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

போதுமான மின்விளக்கு வசதி இல்லாததால் பக்தர்கள் அவதி அடைந்து வந்த நிலையில் இரண்டு புறமும் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ள ட்ரோன் காட்சிகளை வேளாங்கண்ணி பேரூராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

What do you think?

ஸ்ரீ சனீஸ்வரனுக்கு அபிஷேக ஆராதனை

மயிலாடுதுறையில் ரசாயனம் கலந்து விநாயகர் சிலை செய்வதாக புகார்