மதுவிலக்கு மற்றும் கஞ்சா தொடர்பான வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ரூ-12.70 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவுகளில் கள்ளச்சாராயம்,போலி மதுபானம் உள்ளிட்டவற்றை கடத்திச்சென்ற வாகனங்களை,மதுவிலக்கு பிரிவு போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் ஆண்டுக்கு ஒருமுறை பொது ஏலத்தில் விடப்படும்.

அதன்படி, இன்று மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலக வளாகத்தில், 46 இருசக்கர வாகனங்கள், 11 நான்கு சக்கர வாகனங்கள் ஏலத்தில் விடப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்,மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராஜ், மயிலாடுதுறை கோட்ட கலால் அலுவலர் விஜயராணி,தஞ்சாவூர் வட்டார தடய அறிவியல் துணை இயக்குனர் ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலையில்,ஏலத்துக்கு முன்தொகை செலுத்தியவர்கள் வாகனங்களை பார்வையிட்டு ஏலம் எடுத்தனர்.
மொத்தம்,ரூ-12,68,736 பன்னிரெண்டு இலட்சத்து அறுபத்தெட்டாயிரத்து எழுநூற்று முப்பத்தாறு) ரூபாய் தொகைக்கு ஏலம் விடப்பட்டு,மேற்படி ஏலத்தின் முலம் பெறப்பட்ட மொத்த தொகையானது அரசு கணக்கில் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இந்த ஏலத்தில் 200க்கு – மேற்பட்ட பொதுமக்கள் வந்து பங்கேற்றனர்.


