in

வள்ளியூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கார்த்திகை மாத தெப்ப உற்சவம்

வள்ளியூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கார்த்திகை மாத தெப்ப உற்சவம்

 

நெல்லை மாவட்டத்தின் மிகப்பெரிய குடவரை கோவிலான வள்ளியூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கார்த்திகை மாத தெப்ப உற்சவம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் குடவரை கோவிலான ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

பல்வேறு உற்சவங்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறும் தெப்ப உற்சவம் சிறப்பானது. அதன்படி இந்த ஆண்டுக்கான தெப்பதிருவிழா இன்று துவங்கியது.

காலை திருக்கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபதரிசனம் காலைசந்தி நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன.

இரவு 11 மணி அளவில் தெப்ப உற்சவம் திருக்கோவில் எதிரே அமைந்துள்ள சரவணபொய்கை தெப்பக்குளத்தில் நடைபெற்றது.

தெப்பத்திருவிழாவில் உற்சவர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி சிறப்பு அலங்காரத்தில் தெப்ப மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு தீபாராதனைகள் காட்டப்பட்டதும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தெப்பத்திருவிழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

What do you think?

ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் 108 கலச பூஜை

மழை வெள்ளத்தில் வயல்வெளிப்பகுதிக்குள் வந்த 200 கிலோ எடையுள்ள முதலை