ஆதி காமாட்சி அம்மன் கோவிலில் வள்ளி கும்மி ஆட்டம்
ஆதி காமாட்சி அம்மன் கோவிலில் முதல்முறையாக வள்ளி கும்மி ஆட்டம் குழுவினர் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
தமிழ் மண் மனம் மாறாமல் பாரம்பரிய கலையான வள்ளி கும்மி ஆட்டம் தென் மாவட்டங்களில் அனைத்து நிகழ்ச்சிகளும் பாரம்பரிய கலை மீட்டெடுக்கும் நோக்கில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் முதல்முறையாக ஆதி காமாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் ஆடி மாத பெருவிழாவை முன்னிட்டு கோவிலில் வளாகத்தில் இன்று பவளக்கொடி கும்மியாட்டம் குழுவினர்களின் நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் பகுதியில் முதல் முறையாக நடைபெறும் கும்மி ஆட்டத்தை கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியத்துடனும் ஆர்வத்துடனும் கும்மி ஆட்டத்தை கண்டு மகிழ்ந்தனர்.


