in

ஆழ்வாா்திருநகாி அருள்மிகு ஆதிநாதா் ஆழ்வாா் திருக்கோயிலில் வைகாசி திருஅவதார திருவிழா

ஆழ்வாா்திருநகாி அருள்மிகு ஆதிநாதா் ஆழ்வாா் திருக்கோயிலில் வைகாசி திருஅவதார திருவிழா

 

ஆழ்வாா்திருநகாி அருள்மிகு ஆதிநாதா் ஆழ்வாா் திருக்கோயிலில் வைகாசி திருஅவதார திருவிழா 5ம் நாள் நவதிருப்பதி பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளி குடைவரைவாயில் தீபாராதனையில் சுவாமி நம்மாழ்வாருக்கும் மதுரகவி ஆழ்வாருக்கும் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது.

திருக்குறுங்குடி பேரருளாளஇராமானுஜ ஜீயா் சுவாமிகள் ஏழுந்தருளி மங்களாசாசனம். இதில் ஆயிரக்கணக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் நவ திருப்பதிகள் அமைந்துள்ளது. இதில் குருவுக்கு அதிபதியாக ஆழ்வாா்திருநகாி அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வாா் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் தலவிருட்சம் புளியமரம் .

நம்மாழ்வார் சன்னதிக்கு மேல்மாடத்தில் உள்ளது. ஆழ்வார்கள் என்றாலே அது ஸ்ரீ நம்மாழ்வாரைத்தான் குறிக்கும். சின் முத்திரையோடு சிறு குழந்தையாக தவழ்ந்து வந்து இந்தப் புளியமரத்தின் பொந்தில் அமர்ந்த நம்மாழ்வார் 16 ஆண்டுகள் கழித்து வாய் திறந்து திருவாய் மொழி மலர்ந்தருளினார்.

வேதத்தின் சாரத்தை திருவாய் மொழியாக நம்மாழ்வார் வடித்துக் கொடுத்த இடம்தான் திருக்கோயிலில் அமைந்துள்ள புளியமரத்தடி. 38 திவ்யதேசங்களில் எழுந்தருளியுள்ள எம்பெருமான்கள் புளியமரத்தின் இலைகளிலும், கிளைகளிலும் அமர்ந்துகொண்டு எம்மைப் பாடுக, என்று நம்மாழ்வாரிடம் பாடல் கேட்டதாக ஐதீகம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருத்தலத்தில் சுவாமி நம்மாழ்வாா் திருஅவதாரம் செய்த வைகாசி விசாக திருநட்சத்திரத்தை ஆண்டுதோறும் 15 தினங்கள் ப்ரம்மோற்ச்சவமாக கொண்டாடுகின்றனா். இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ திருவிழா கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 5ம் திருநாளான இன்று காலையில் நவதிருப்பதி ஸ்தலங்களில் உள்ள பெருமாள்கள் ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் திருக்கோவிலுக்கு எழுந்தருள அங்கு நம்மாழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது.

மாலையில் ஒன்பது பெருமாளுக்கும் சுவாமி நம்ஆழ்வார் மதுரகவிஆழ்வா் ஆகியோருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று கோஷ்டி சடாாி மாியாதை நடைபெற்றது . இரவில் சுவாமி நம்மாழ்வாா் ஹம்ச (அன்ன) வாகனத்திலும் , மதுரகவி ஆழ்வாா் பரங்கி நாற்காலியிலும் சிறப்பு அலங்காரத்தில் ஏழுந்தருள குடைவரை பெருவாயிலில் காத்திருக்க நவதிருப்பதி பெருமாள்கள் ஒவ்வொருவராக கருடவாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி நம்ஆழ்வாருக்கும் ஸ்ரீமதுரகவி ஆழ்வாருக்கும் திருக்காட்சி கொடுத்தனா். ஆழ்வாா்திருநகாி – ஆதிநாதா் , ஸ்ரீவைகுண்டம் – கள்ளா்பிரான், திருப்புளியங்குடி – காய்சினவேந்தா், நத்தம் – எம்இடா்கடிவான், இரட்டை திருப்பதி – தேவப்பிரான் மற்றும் அரவிந்தலோசனா் , பெருங்குளம் – மாயக்கூத்தா், தென்திருப்பேரை – நிகாில் முகில்வண்ணன், திருக்கோளுா் – வைத்தமாநிதி ஆகியோா் ஒவ்வொருவராக பொிய திருவடியான கருடாழ்வாா் மேல் ஏழுந்தருளினா். இந் நிகழ்வில் திருக்குறுங்குடி பேரருளாளஇராமானுஜ ஜீயா் சுவாமிகள் ஏழுந்தருளி மங்களாசாசனம் செய்தாா்.

அவருக்கும் மற்ற ஆச்சாாிய பெருமக்களுக்கும் மாியாதைகள் செய்யப்பட்டது. தொடா்ந்து 9 கருடவாகனங்களும் எட்டு வீதிகளில் வலம் வந்தது. ஜீயா் சுவாமிகளும் ஆச்சாா்ய பெருமக்களும் கருட வாகனத்தின் முன் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சாம வேத சாரமான திருவாய்மொழி பாசுரங்களை பாடியபடி செல்ல, பக்தா்களின் நாம சங்கீா்த்தனம் கோலாட்டம் பின் செல்ல இரவு முழுவதும் கருடவாகனசேவை நடைபெற்றது. மறுநாள் காலையில் நவ திருப்பதி பெருமாள் – நம்மாழ்வாா் பிாியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

What do you think?

நெய்வேலி தேசிய மின்சக்தி பயிற்சி தொடக்க விழா

மைக் செட் Youtube சேனல் ஸ்ரீராமுக்கு திருமணம் முடிந்தது