சினிமாவில் நடிக்க வரும் ஊர்வசியின் மகள் தேஜா லட்சுமி
மலையாள திரைப்பட நடிகர்கள் மனோஜ் கே ஜெயன் மற்றும் ஊர்வசியின் மகள் தேஜா லட்சுமி, குஞ்சாட்டா ஐகேகே புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இயக்குனர் பினு பீட்டரின் படத்தில் அறிமுகம் ஆகிறார்.
தேஜா லட்சுமியின் பெற்றோர் ஊர்வசி மற்றும் மனோஜ் கே ஜெயன் இவர்கள் 1998 இல் திருமணம் செய்து கொண்டனர் 2008 ஆம் ஆண்டு பிரிந்தனர்.
பிரிவுக்கு பிறகு மகள் தந்தையுடன் இருக்கிறார்.
ஊர்வசி தேசிய விருது பெற்ற நடிகை, 700 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் இன்னும் பிஸியா..னா நடிகையாக இருக்கிறார்.
அதே நேரத்தில் மனோஜ் பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். தேஜா லட்சுமிக்கு 24 வயது. அவருக்கு இன்ஸ்டாகிராமில் 37 ஆயிரம் Followers உள்ளனர்.
அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பார்த்தால், தேஜா திரைப்பட அறிமுகத்திற்கு முன்பே பிரபலமானவர் என்பது தெரியும். சுந்தரியயவல் ஸ்டெல்லா(Sundariyayaval Stella) திரைப்படத்தின் வெளியீட்டு விழாவில், மனோஜ் கே ஜெயன் அவரது அறிமுகத்தைப் பற்றி உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்.
இது என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணம்” என்று கூறினார். பத்திரிகையாளர்களிடம் உரையாற்றிய மனோஜ், தேஜா லட்சுமிக்கு ஏழு வயது இருக்கும்போது சென்னையிலிருந்து குடிபெயர்ந்தோம். “அவள் நன்றாகப் படிக்க வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும், திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்பினேன்,” தனது மகளை கவனமாக வளர்ப்பதற்காக நடிப்பு வாழ்க்கையில் ஒரு படி பின்வாங்கியதாகவும் கூறினார்.
“தேஜா லட்சுமி முதன்முதலில் திரைப்படங்களில் நடிக்கும் விருப்பத்தை தனது தந்தையிடம் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூறினார். “அவள் முதலில் இதைப் பற்றி என் மனைவி ஆஷாவிடம் பேசினாள், அவர் என் மகளுக்கு நல்ல தோழி.
அவள் எனக்குத் தெரிவித்தபோது, முதலில் அவளுடைய அம்மாவிடம் தெரிவிக்கச் சொன்னேன். அவளை சென்னைக்குச் அனுப்பிவைதோம் , முதலில் ஊர்வசியின் ஆசிர்வாதத்தைப் பெற வேண்டும் என்று நான் அவளிடம் சொன்னேன்.. ஊர்வசியும் சம்மதித்து ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார், ஊர்வசி முதலில் கதையைக் கேட்க வேண்டும் என்று நான் விரும்பினேன்.. ஊர்வசிக்கும் என் மகளுக்கும் பிடித்த பிறகுதான் கதையைக் கேட்டேன். எனக்கும் பிடித்திருந்தது.” என்றார். இந்தப் படத்தில் சர்ஜானோ காலித்துக்கு ஜோடியாக தேஜா லட்சுமி நடிக்கவுள்ளார்.


