ஆறடி ரோஜா மாலை அணிவித்து நெகிழ்ச்சி ஏற்படுத்திய ஒன்றிய செயலாளர்
ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளருக்கு ஆறடி ரோஜா மாலை அணிவித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஒன்றிய செயலாளர்
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வருகை வரவேற்பது குறித்து அதிமுக சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆலோசனைக் கூட்டம்.
தமிழகம் முழுவதும் உள்ள 34 மாவட்டங்களில் அஇஅதிமுக கழக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரு மான எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு திமுக மக்களுக்கு இழைத்த அநீதிகளை எடுத்துரைத்து பரப்புரையில் ஈடுபட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகின்ற 30 மற்றும் 31 தேதிகளில் சுற்றுப்பயணம் வர இருக்கும் நிலையில் அவரை வரவேற்பது குறித்து இன்று ராமநாதபுரம் பட்டண காத்தான் தனியார் திருமண மண்டபத்தில் அஇஅதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டமானது மாவட்ட கழக செயலாளர் முனியசாமி தலைமையில் மண்டபம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளரும் முன்னாள் கவுன்சிலர் மற்றும் சேர்மனுமான மருது பாண்டியன் ஏற்பாட்டில் ஆலோசனைக் கூட்டமானது சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.

இதில் அஇஅதிமுக மாநில, மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் தொண்டர்கள் என பலரும் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


