யுஜிசி கௌரவ விரிவுரையாளர்கள் 16வது நாளாக போராட்டம்
யுஜிசி கௌரவ விரிவுரையாளர்களுக்கு நிர்ணயித்த ஊதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கௌரவ விரிவுரையாளர்கள் 16வது நாளாக போராட்டம்.
திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 16 வது நாளாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக யூஜிசி நிர்ணயம் செய்த 57 ஆயிரத்து நானூறு ரூபாய் ஊதியத்தை வழங்க கோரியும், மகப்பேறு விடுப்பை தரக்கோரியும், பதினோரு மாத ஊதியம் என்பதை 12 மாத ஊதியமாக எங்களுக்கு தர வேண்டும் என்றும், பிஎஃப் மட்டும் ஈஎஃப் வழங்க வேண்டும், 16 நாட்களாக தொடர்ந்து போராடி வரும் எங்களது போராட்ட நாட்களை பணி நாட்களாக கருதி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வருகை புரிந்து தொடர்ந்து 16வது நாளாக அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விடியல் அரசு என கூறும் திமுக அரசு தங்களது வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்த வேண்டும் என கௌரவ விரிவுரையாளர்கள் கோரிக்கை வைத்தனர்.


