கூட்டம் சேர்வதால் மட்டும் வெற்றி பெற முடியாது த.வெ.க தலைவர் விஜய் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் வீரபாண்டியன் பேட்டி
மயிலாடுதுறை மாவட்டம்,மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழக பொதுசெயலாளர் வீரபான்டியன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது.
கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு 10. லட்சம் மடிகணினி வழங்குவதை எடப்பாடி பழனிச்சாமி அரசியல் ஆக்குகிறார்,பொங்கல் தொகுப்பில் மஞ்சள் உற்பத்தி விவசாயிகளின் நலன் காக்க மஞ்சளையும் பொங்கல் தொகுப்பில் வழங்க வேண்டும்.
பொங்கல் விழா இயற்கைக்கு எடுக்கும் விழா அதை சினிமா டென்ட் போடுவது போல் அமித்ஷா கொண்டாடி அதை மத சாயம் பூச நினைக்கிறார்.ஓரிஷாவில் தமிழர்களை திருடர்கள் என்பவர் இங்கு பொங்கல் விழா கொண்டாடுகிறார்.
உலக வர்த்தகம் டாலரில் தான் நடைபெற வேண்டும் என்பதால் அமெரிக்கா வெனிசுலாவை நிர்பந்தபடுத்துகிறது.பஞ்சசீல கொள்கையை உலகுக்கு தந்த மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியா அதை கண்டிக்க வேண்டும்.தற்போது வழங்கி உள்ள ஓய்வுதிய திட்டத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும் சிறப்பானது.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தமிழக உரிமைக்காக போராடுகிறார்.திமு.க கூட்டணியில் அதிக இடம் கேட்பது ஜனநாயக உரிமை. அதை முதல்வர் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்.ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்.எடப்பாடிக்கு தான் தோல்வி பயம் இருக்கிறது எங்கள் கூட்டணிக்கு இல்லை.பி.ஜே.பி யையும் அ.தி.மு.க கூட்டணியையும் தோற்கடிப்பது தான் எங்கள் நோக்கம் ஆயிரம் அமித்ஷா மோடி வந்தாலும் எங்கள் கூட்டனி பாதிக்காது..
தமிழ் கலாச்சாரத்தை பி.ஜே..பி.கெடுக்க நினைப்பதை தமிழ் மக்கள் ஏற்க மாட்டார்கள்.விஜய்க்கு கூட்டம் கூடலாம். மக்கள் நலம் சார்ந்து அரசியல் செய்தால் தான் மக்கள் ஏற்றுகொள்வார் என்றார் அப்போது இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பல முன்னனி கட்சியினர் உடனிருந்தனர்.


