தலைவன் தலைவி படம் வெளியாவதில் சிக்கல்
நடிகர்கள் நித்யா மேனன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு ‘தலைவன் தலைவி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் டீசர் சென்ற மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது.. பசங்க படத்தை இயக்கிய பாண்டியராஜ் தலைவன் தலைவி படத்தின் முலம் விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக இணைத்துள்ளார்.
விஜய் சேதுபதியுடன் நித்யா மேனன் நடிக்கும் இரண்டாவது படம் இது .சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த இந்த படம் வெளியாவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது விஜய் சேதுபதியின் மகாராஜா படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் விநியோகஸ்தர்கலூக்கு 20 கோடிக்கு மேல் லாபம் கிடைத்தது அந்த நம்பிக்கையில் விஜய் சேதுபதியின் ACE திரைப்படத்தை வாங்கினர் ஆனால் தமிழகத்தில் வெறும் 2 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்த நிலையில் தற்போது தலைவன் தலைவி படத்தை நியோகஸ்தர்கள் வாங்க தயங்குகின்றனர் ஆனால் பாண்டியராஜனுடன் விஜய் சேதுபதி இணைவதால் படம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை நிலவும் நிலையில் விநியோகஸ்தர்கள் பிரச்சனை தீர்ந்தால் மட்டுமே தலைவன் தலைவி படம் வெளியாகும்