பூக்களின் விலை உயர்வால் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை என வியாபாரிகள் தகவல்
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தஞ்சை மாவட்டத்தில் கரும்பு, மஞ்சள், பூக்கள் காய்கறிகள் என இறுதி கட்ட வியாபாரத்தில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ளதால், பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. முல்லை 2,000 ரூபாய், ஜாதி 2,000 ரூபாய், காக்கரட்டான் 1,500 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.
இதே போல் பன்னீர் ரோஸ் 400 ரூபாய், செவ்வந்தி 50 முதல் 100 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. இதனால் எதிர்பார்த்து அளவிற்கு வியாபாரம் நடைபெறவில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

விலை உயர்ந்த முல்லை ஜாதி பூக்களை பொதுமக்கள் வாங்கவில்லை எனவும் மிகவும் குறைந்த விலையில் விற்கும் செவ்வந்தி பூக்களை மக்கள் அதிக அளவில் வாங்கி செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.


