in

வடலூரில் களை இழந்த ஆட்டுச் சந்தையால் வியாபாரிகள் ஏமாற்றம்

வடலூரில் களை இழந்த ஆட்டுச் சந்தையால் வியாபாரிகள் ஏமாற்றம்

கடலூர் மாவட்டம் வடலூரில் பொங்களை முன்னிட்டு ஆட்டுச் சந்தையில் ஆடுகளின் விற்பனை நடைபெறுவது வழக்கம்

இந்நிலையில் வடலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் முறையான அறிவிப்பு வழங்கப்படாததால் வடலூர் ஆட்டுச் சந்தை கலை இழந்து காணப்பட்டது இச்சந்தையில் கடலூர் மாவட்டம் அல்லது பிற மாவட்டங்களை சேர்ந்த ஆட்டு வியாபாரிகள் அதிக அளவில் பொங்கலை முன்னிட்டு ஆடுகளை வாங்கி செல்ல
வருவது வழக்கம்.
    
இதேபோன்று இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் வியாபாரிகள் ஆடுகளை வாங்க ஆர்வத்துடன் வந்த நிலையில் ஆடுகளின் வரத்து குறைவு காரணமாக வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதுகுறித்து ஆட்டு வியாபாரிகள் தெரிவிக்கையில் வடலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் முறையான அறிவிப்பு வழங்கப்படாததால் ஆடுகளின் வரத்து குறைவாக உள்ளது எனவே பொங்கல் பண்டிகைக்காக ஆடுகள் வாங்க வடலூர் சந்தைக்கு வந்த எங்களுக்கு மிகுந்த ஏமாற்றமே என தெரிவித்தனர்.

ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் வியாபாரம் நடைபெறும் வடலூர் ஆட்டு சந்தையில் இந்த வருடம் ஆடுகளின் வரத்து குறைவால் வியாபாரம் மந்தமாக உள்ளதாக ஆட்டின் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

What do you think?

பால தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் மார்கழி மாத விசாக நட்சத்திர அபிஷேக ஆராதனை

செஞ்சியில் முன்னாள் சென்ற தனியார் சொகுசு பேருந்தின் மீது  லாரி மோதிய விபத்தில் லாரி டிரைவர் படுகாயம்