in

திருச்செந்தூர் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா

திருச்செந்தூர் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா

 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மண்டபூஜை நிறைவு விழா வெகு விமர்சையாக நடந்தது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகின்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கடந்த ஜூலை மாதம் ஏழாம் தேதி குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த குடமுழுக்கு விழா என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தானர்.

குடமுழுக்கு விழா நிறைவு பெற்றது தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறுவது வழக்கம்.

ஆனால் வருகிற 14-ஆம் தேதி ஆவணி திருவிழா துவங்குகின்ற காரணத்தினால் மண்டல பூஜை விழா 30 தினங்கள் மட்டுமே நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று மண்டலபூஜை நிறைவு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

மண்டல பூஜையை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

தொடர்ந்து மூலவருக்கு உள்பிரகாரத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

உற்சவர் சண்முகர், மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சஷ்டி மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் நடப்பேற்று பூர்ணாகுதி நடந்தது.

தொடர்ந்து அங்கிருந்த கும்பங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு மூலவர் மற்றும் சண்முகர் உட்பட வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர், விநாயகர் உள்பட அனைத்து பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடந்தது.

மேலும் இன்று மண்டல பூஜை நிறைவு விழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசனம் செய்தனர்.

What do you think?

சீர்காழி ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்த இளைஞர்

நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா