அரசு பேருந்து மோதி டைம் கீப்பர் ராமு என்பவர் உயிரிழந்தார்
தேவிப்பட்டினத்தில் அரசு பேருந்து மோதி டைம் கீப்பர் ராமு என்பவர் உயிரிழந்தார் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி அருகே உள்ள கொத்தியார் கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராமு (55), இவர் தேவிப்பட்டினம் பேருந்து நிலையத்தில் டைம் கீப்பராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் வழக்கம் போல் பேருந்து புறப்படும் நேரம் குறித்து பயணிகளுக்கு சத்தம் போட்டு கூறிக் கொண்டிருந்தார். அப்போது தேவிப்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து இருந்து பரமக்குடிக்கு புறப்பட்டுச் சென்ற அரசு பேருந்து மோதியதில் ராமு நிலைகுலைந்து கீழே விழுந்தார். அப்போது பேருந்தின் டயர்கள் ஏறியதில் ராமு உடல் நசுங்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த தேவிப்பட்டினம் போலீஸார் ராமுவின் உடலை கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும் டிரைவர் கந்தசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் டைம் கீப்பர் மீது பேருந்து சக்கரம் ஏறி இறங்கிய காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.


