in

திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில் சித்திரை பெருவிழா தங்க சேஷ வாகனம்

திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில் சித்திரை பெருவிழா தங்க சேஷ வாகனம்

 

திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில் சித்திரை பெருவிழா ஐந்தாம் திருநாள் தங்க சேஷ வாகனத்தில் பவனி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான புராண சிறப்பு மிக்க ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவிலில் சித்திரை பெரு விழாவை முன்னிட்டு ஐந்தாம் திருநாள் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் தங்க சேஷ வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

முன்னதாக உற்சவர் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் சர்வ அலங்காரத்தில் தங்க சேஷ வாகனத்தில் எழுந்தருளினார் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன.

பின்னர் மங்கள வாத்தியங்களுடன் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வான வெடிகள் மற்றும் மின்னொழியில் சேஷ வாகனத்தில் பவனி வந்த ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாளுக்கு ஏராளமான பக்தர்கள் அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.

What do you think?

ஆசியாவிலேயே உயரமான 62 அடி உயரம் உள்ள சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை

மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி சோமநாதர் திருக்கோவிலில் சித்திரை பெருவிழா ரிஷப வாகனம்