திருக்கார்த்திகை தீபத் திருவிழா நான்காம் நாள் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் நான்காம் நாள் இரவு உற்சவத்தில் பஞ்ச மூர்த்திகள் வெள்ளி கற்பகவிருக்ஷ்ம், காமதேனு வாகனத்தில் மாட வீதியில் உலா…..
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…..
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது.
திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நான்காம் நாள் இரவு உற்சவமான இன்று அண்ணாமலையார் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு வண்ண வண்ண மலர்களால் மலர் மாலைகள் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சர விளக்கு தீபாராதனை, பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பஞ்ச மூர்த்திகள் அனைவரும் ராஜ கோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர்.
இதனை தொடர்ந்து விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், முருகர் வெள்ளி மயில் வாகனத்திலும், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மன் வெள்ளி கற்பகவிருக்ஷ்ம் வாகனத்திலும், பாராசக்தி அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் வெள்ளி விமானத்திலும் அமர்ந்து நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இந்த உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


