in

பஞ்ச மூர்த்திகள் மர தேருக்கு கலசங்கள் பொருத்தும் பணிகள் நிறைவு…..

பஞ்ச மூர்த்திகள் மர தேருக்கு கலசங்கள் பொருத்தும் பணிகள் நிறைவு…..

 

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது.

திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக ஏழாம் நாள் திருவிழாவில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் மர தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.

   

இந்நிலையில் வரும் 30ம் தேதி ஏழாம் நாள் திருவிழா நடைபெற உள்ளதால் மர தேரில் பொருத்தப்படும் கலசத்திற்கு அண்ணாமலையார் கோவிலில் உள்ள சம்மந்த விநாயகர் சன்னதி முன்பு கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து கலசங்களை எடுத்து வந்து விநாயகர் தேர், முருகர் தேர், அண்ணாமலையார் தேர், பராசக்தி அம்மன் தேர் மற்றும் சண்டிகேஸ்வரர் தேருக்கு கலசங்கள் பொருத்தும் பணிகள் நிறைவு பெற்றது.

What do you think?

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஐந்தாம் நாள் கண்ணாடி ரிஷப வாகனம்

The Ultimate Guide to Live Roulette: Everything You Need to Know