in

பழனி அருள்மிகு மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது

பழனி அருள்மிகு மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயிலான அருள்மிகு மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா கடந்த மாதம் பிப்6 ம் தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது. கடந்த பிப்.10ம் தேதி திருக்கம்பம்

சாட்டுதல், பிப்.17ம் தேதி கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் நடைபெற்றது.

 

விழாவை முன்னிட்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கம்பத்துக்கு பால், தண்ணீர், மஞ்சள்நீர் ஊற்றியும், மாலைகள் போட்டும் வழிபாடு நடத்தி வந்தனர்.

இன்று இரவு திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு பொட்டு, காரை கொண்டு வருதல் நடைபெற்றது. பின்னர் அருள்மிகு மாரியம்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சோடஷ அபிஷேகமும், சோடஷ உபச்சாரமும் நடத்தப்பட்டது. பின்னர் பட்டாடைகள், நகைகள் அணிவிக்கப்பட்டு அம்மனுக்கும், திருக்கம்பத்துக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓத, ஓதுவாமூர்த்திகள் திருமறை பாடல்கள் பாட மேளதாளம் முழங்க நடைபெற்ற திருக்கல்யாணத்தை பக்தர்கள் பார்த்து ஓம்சக்தி, பராசக்தி என கோஷமிட்டனர். நாளை மாசித்தேரோட்டமும், வண்டிக்கால் பார்த்தல், வாணவேடிக்கையும், நாளை அதிகாலை கம்பத்தை கங்கையில் சேர்த்தல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.

திருக்கல்யாண நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையர் மாரிமுத்து உதவி ஆணையர் லட்சுமி, கண்காணிப்பாளர் அழகர்சாமி, காணியாளர்கள் நரேந்திரன், பண்ணாடி ராஜா, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாளை பிப்.25 ம் தேதி மாலை 4.30 மணிக்கு மாசித்தேரோட்டம் நடத்தப்பட்டு பிப்.26 தேதி இரவு 10 மணிக்கு கொடியிறக்கப்பட்டு கம்பம் விழா நிறைவு பெறுகிறது.

What do you think?

நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா- 20 ஆயிரம் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்

சிதம்பரத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் சேதம்,