in

 பிள்ளையார் குப்பத்தில் நடைபெற்ற கூத்தாண்டவர் திருக்கல்யாண வைபவம்

 பிள்ளையார் குப்பத்தில் நடைபெற்ற கூத்தாண்டவர் திருக்கல்யாண வைபவம்

 

புதுச்சேரி அடுத்து பிள்ளையார் குப்பத்தில் நடைபெற்ற கூத்தாண்டவர் திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டு தாலி கட்டும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.

புதுச்சேரி அடுத்துள்ள பிள்ளையார் குப்பம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை மாத திருவிழா கடந்த 14ஆம் தேதி விநாயகர் பூஜை மற்றும் கொடியேற்றம் கூத்தாண்டவர் சுவாமிக்கு மகா தீபாரதனையுடன் தொடங்கியது.

தொடர்ந்து கூத்தாண்டவர்க்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் மற்றும் ஊரணி பொங்கல் சாகைவார்த்தல் ஆகியவை நடைபெற்று வீதி உலா காட்சிகளும் நடைபெற்றது.

 

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கூத்தாண்டவர் திருக்கல்யாண நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியில் இருந்து கலந்துகொண்டு ஏராளமான திருநங்கைகள் பூசாரி கைகளால் தாலி கட்டும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து கூத்தாண்டவர் திருத்தேர் உற்சவமும் அழுகல நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

What do you think?

நிலவில் மனிதர்களை அனுப்புவது மிகப்பெரிய திட்டம்

மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கோடை மழை