அருள்மிகு பெரியாண்டவர் திருக்கோயில் திருநெறிய தீந்தமிழ் திருமறை திருக்குட நன்னீராட்டு திருவிழா
கீழ்கூத்தப்பாக்கம் கிராமம் அருள்மிகு பெரியாண்டவர் திருக்கோயில் திருநெறிய தீந்தமிழ் திருமறை திருக்குட நன்னீராட்டு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் கீழ் கூத்தம்பாக்கம் கிராமம் அருள்மிகு பெரியாண்டவர் திருக்கோயில் திருநெறிய தீந்தமிழ் திருமறை திருகுட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு இன்று காலை இரண்டாம் கால வேள்வியில் பல்வேறு விதமான திரவிய பொருட்கள், பழங்கள் மற்றும் பட்டு வஸ்திரங்கள் ஆகியவை செலுத்தப்பட்டன.
தொடர்ந்து கலைகள் நாடியின் வழியாக மூலத் திருமேனி அடைதல் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து சிவா கைலாய வாத்தியங்கள் முழங்க திருக்குடங்கள் புறப்பாடு நடைபெற்றது.
மேலும் கருவறை விமான திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
மேலும் மூலவர் அருள்மிகு பெரியாண்டவருக்கு மகாபிஷேகம் மற்றும் மலர்ச்சனை, திருமுறை விண்ணப்பம் பேரொளி வழிபாடு ஆகியவை நடைபெற்றன.
விழாவுக்கான ஏற்பட்டினை ஆலய நிர்வாகக் குழுவினர் மற்றும் கீழ் கூத்தம்பாக்கம் மற்றும் தென்னகரம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.