in

திருவிடைமருதூர் மத்தியார்சுனம் மகாலிங்கசுவாமி திருக்கோயில் தைப்பூசத்தை திருத்தேரோட்டம்

திருவிடைமருதூர் மத்தியார்சுனம் மகாலிங்கசுவாமி திருக்கோயில் தைப்பூசத்தை திருத்தேரோட்டம்

 

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் மத்தியார்சுனம் என போற்றப்படும் மகாலிங்கசுவாமி திருக்கோயிலில் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு 5 திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் திருவாடுதுறை ஆதீனம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான பெருநலமாமுலையம்மன் சமேத மகாலிங்கசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தை சுற்றிலும் நான்கு திசைகளிலும் சிவதலங்கள், நான்கு வீதிகளிலும் சிவன் கோயில்களுக்கும் நடுநாயகமாக இத்தலம் அமையப்பட்;டுள்ளதால் இது பஞ்சலிங்கத்தலம் என்ற பெருமை பெற்றதாகும் இத்தலத்தில் சந்திரன் விநாயக பெருமான், அம்பிகை, அகத்திய முனிவர் உள்ளிட்ட முனிவர்களுக்கும், இறைவன் ஜோதி வடிவமாகவும், ஏகநாயக வடிவமாகவும் காட்சியளித்துள்ளார் வரகுண பாண்டியன் இத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்து சென்ற பின்னர் தான் பிரமஹத்தி தோஷம் நீங்க பெற்றான் இத்தலத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் 27 லிங்கங்கள் தனி தனியே ஆடல்வல்லான் மண்டபத்தில் உள்ளது இது காசிக்கு நிகரான தலமாகும் என வரலாறு கூறுகிறது இத்தலத்தை பட்டினத்தார், அருணகிரிநாதர், சுந்தரர், திருநாவுக்கரசர், திருஞானசம்மந்தர், மாணிக்கவாசகர் உள்ளிட்ட பல அடியார்கள் போற்றி பாடியுள்ளனர் மேலும் இது பத்திரகிரியார் முத்தி பெற்ற தலமாகும் 1755ம் ஆண்டு முதல் இத்தலத்தில் கார்த்திகை நிறைவு சோமவாரத்தில் லட்ச தீபம் ஏற்றும் வைபவம் நடந்து வருகிறது என்பது வரலாறு இதனை நினைவுபடுத்தும் வகையில் விளக்குடன் கூடிய பாவை சிலை இத்தலத்தில் அமைந்துள்ளது

இத்தகைய சிறப்பு பெற்ற சைவத்திருத்தலத்தில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டு இவ்விழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் காலை மாலையில் பல்வேறு வாகனங்களில் பல்வேறு அலங்கரித்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான 9 ஆம் நாளான இன்று விநாயகர், முருகன், மகாலிங்கம் சுவாமி, ஸ்ரீ பிரகத்சுந்தர குஜாம்பிகை, சண்டிஸ்கரர் என பஞ்சமூர்த்திகள் தனி தனி தேரில் எழுந்தருளி 5 திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் திருவாடுதுறை ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழந்து வந்தனர். முக்கிய நிகழ்ச்சியான நாளை காவிரி கரையில் தைப்பூசம் தீர்த்தவாரி நடைபெறுகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

What do you think?

‘சீதா ராமம் 2’ வதந்தி பலமா பரவுச்சு

சூர்யாவோட நடிப்புக்கு 4 விருதுகள்