TCOA பப்ளிக் பவுண்டேஷன் சார்பில் தார்ப்பாய் மற்றும் போர்வை வழங்கப்பட்டது
மேல்மலையனூரில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 30க்கு மேற்பட்ட குடிசைகள் மழையால் சிதலம் அடைந்து நிலையில், இதனை அறிந்த TCOA பப்ளிக் பவுண்டேஷன் சார்பில் தார்ப்பாய் மற்றும் போர்வை வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அமைந்துள்ள நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்தது இதனால் குடிசை வீடுகள் மிகவும் சேதம் அடைந்து இருந்தது.
இதனை அறிந்த TACOA பப்ளிக் பவுண்டேஷன் சார்பில் தார்ப்பாய் குடிசை மேல் அமைத்துக் கொடுத்து மற்றும் போர்வைகள் வழங்கினர், இதனால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

குறிப்பாக இக்குடியிருப்பு பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் இவர்களுக்கு தொகுப்பு வீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


