‘சீதா ராமம் 2’ வதந்தி பலமா பரவுச்சு
சீதா ராமம் படத்துக்கு அப்புறம் இவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா பார்க்க ரசிகர்கள் ரொம்ப ஆசையா இருந்தாங்க.
அதுக்கு ஏத்த மாதிரி ஒரு போட்டோ வெளியாகி வதந்திகளைக் கிளப்புச்சு. ஆனா இப்போ வந்திருக்கிற தகவல்படி, இது ஒரு மியூசிக் ஆல்பம் பாடல்.
இந்தப் பாட்டோட பேரு ‘பீகி பீகி’ (Bheegi Bheegi). இதோட புரோமோ (Promo) இப்போ வெளியாகிடுச்சு. பாக்குறதுக்கு செம கியூட்டா, ரொமான்டிக்கா இருக்கு.
முழுப் பாடலும் வர்ற பிப்ரவரி 2-ம் தேதி ரிலீஸ் ஆகுது.
மிருணாள் கடைசியா விஜய் தேவரகொண்டா கூட நடிச்ச ‘தி ஃபேமிலி ஸ்டார்’ படம் பெருசா போகல.
இப்போ அவர் அதிவி சேஷ் கூட சேர்ந்து நடிச்சிருக்கிற ‘டகோயிட்’ (Dacoit) படம் வர்ற மார்ச் மாசம் ரிலீஸ் ஆகப்போகுது.
நடுவுல ஹைதராபாத் போனப்போ, “ஒரு தெலுங்கு படத்துல கமிட் ஆகியிருக்கேன்”னு சொன்னதுனால தான் ‘சீதா ராமம் 2’ வதந்தி பலமா பரவுச்சு.
நம்ம DQ இப்போ ரொம்ப பிஸி. போன வருஷம் ‘காந்தா’ படத்துல நடிச்சவரு, இப்போ ‘ஆகாசம்லோ ஓக தாரா’ மற்றும் ‘ஐ அம் கேம்’ அப்படின்னு ரெண்டு மூணு படங்கள்ல மும்முரமா நடிச்சுட்டு இருக்காரு.


